ஏற்காட்டில், கரடு அந்தோணியார் ஆலய திருவிழா
ADDED :2393 days ago
ஏற்காடு: ஏற்காட்டில், கரடு அந்தோணியார் ஆலயத்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காடு, மஞ்சக்குட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட, அந்தோணியார் நகர் மலைக் குன்றின் உச்சியில், கரடு அந்தோணியார் ஆலயம் உள்ளது.
இங்கு நேற்று (ஜூன்., 23ல்) நடந்த விழாவில், மஞ்சக்குட்டை பங்கு ஆலயத்தில் இருந்து, மலை உச்சியில் உள்ள அந்தோணியார் தேர், பொதுமக்களால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு பங்குதந்தை கிஷோர் ஹென்றி தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விழாவில் டேனியல் சுந்தர்ராஜ், செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.