உலக நன்மை வேண்டி அஷ்ட பைரவ யாகம்
ADDED :2326 days ago
ஏகனாம்பேட்டை: உலக நன்மை வேண்டி, தசபுஜ சம்ஹார பைரவ யாகம் நேற்று நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, நவாசாகிப்பேட்டை கிராமத்தில், செல்வநாயகி சமேத நவநிதிஸ்வரர் கோவில் வளாகத்தில், தசபுஜ சம்ஹார பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நன்மை வேண்டி, நேற்று முன்தினம் இரவு, மஹா அஷ்ட பைரவ யாகம் நடந்தது. சிறப்பு அபிஷேகத்திற்கு பின், மலர் அலங்காரத்தில், பைரவர் எழுந்தருளினார். இதில், ஏகனாம்பேட்டை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.