வனபத்ரகாளியம்மனுக்கு ரூ.14.55 லட்சம் காணிக்கை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணியதில், ரூ.14.55 லட்சம் ரூபாய் இருந்தது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தன.
திருப்பூர் தலைமையிட உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா, ஆய்வாளர் சரண்யா ஆகியோர் முன்னிலையில், விஷ்ணு சேவா சங்கத்தினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.கோவிலில், 20 உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணியதில், பக்தர்கள் செலுத்திய, 12 லட்சத்து, 39 ஆயிரத்து, 949 ரூபாய் இருந்தது. மேலும், 74.5 கிராம் தங்கமும், 101.3 கிராம் வெள்ளியும் இருந்தது. மேலும் தட்டு காணிக்கைகள் எண்ணியதில், இரண்டு லட்சத்து, 15 ஆயிரத்து, 843 ரூபாய் இருந்தது. மொத்தம், 14 லட்சத்து, 55 ஆயிரத்து, 790 ரூபாய் இருந்தது.