வராகி அம்மனுக்கு நவராத்திரி பெரு விழா
ADDED :2492 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஸ்ரீவராகி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரி பெருவிழா துவங்கியது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் ஸ்ரீவராகி அம்மன் சன்னதியில், ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்றுமுன்தினம் துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று 2ம் நாள் அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் நடந்தது. இன்று 3வது நாள் குங்கும அலங்காரம், 4வது நாள் சந்தன அலங்காரம், 5வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரம், 6வது நாள் மாதுளை அலங்காரம், 7-வது நாள் நவதானிய அலங்காரம், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரம், 9வது நாள் கனிவகை அலங்காரமும், நடை பெறுகிறது.