உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் ஆனி திருமஞ்சன விழா

உத்தரகோசமங்கையில் ஆனி திருமஞ்சன விழா

உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையான சிவாலயம்.

இங்கு ஆண்டிற்கு ஐந்து முறை உற்ஸவர் சிவகாமி அம்மன் சமேத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 6 வது முறையாக மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத் ரா தரிசனத்தில் பச்சை மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும்.இன்று( ஜூலை 8) அதிகாலை 4:00 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு உற்ஸவர் களுக்கு 21 வகை யான அபிஷேக ஆராதனைகளும், தாழம்பூ சாற்றி வழிபாடும் நடக்கிறது. சிவனடியார்கள், பக்தர் களால் சிவபுராணம்,திருவாசகம், நாமாவளி பாடல்கள் பாடப்படும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !