உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் கண்ணூர்பட்டி ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ராசிபுரம் கண்ணூர்பட்டி ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ராசிபுரம்: கண்ணூர்பட்டி சவுந்தரவல்லி நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர்  லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர்பட்டியில், 100 ஆண்டுகள் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. கண்ணூர்பட்டி, கடையநல்லூர், கல்யாணி, நத்தமேடு, நாட்டாமங்கலம் உள்ளிட்ட, எட்டு கிராம மக்களின் சார்பாக, இந்த பகுதியில் சவுந்தரவல்லி நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது.  

கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆனதால், தற்போது, கண்ணூர்பட்டி  கிராமத்தை
சேர்ந்த மக்களும் பூர்வீக இடத்தை கொண்டவர்களும் அஷ்டபந்தன  விழா ஏற்பாடு செய்தனர். இதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 8ல் தொடங்கியது.  நேற்று முன்தினம் (ஜூலை., 10ல்), கிராமசாந்தி அழைக்கப் பட்டது. தொடர்ந்து, புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்தபிறகு கோவில் கலசம் வைக்கப்பட்டது. நேற்று (ஜூலை., 10ல்) காலை, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. சவுந்தரவல்லி சமேத ஈஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள், லட்சுமி நாராயண பெருமாள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !