உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட ஏகாதசி: பாண்டுரங்கன் பாதம் பணிந்து பக்தர்கள் வழிபாடு

ஆஷாட ஏகாதசி: பாண்டுரங்கன் பாதம் பணிந்து பக்தர்கள் வழிபாடு

திருப்பூர்;ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, பாண்டுரங்கன், ருக்மணி தேவி சன்னதியில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபட்டனர்.

திருப்பூர் ராயபுரத்தில் உள்ள, ராஜவிநாயகர் கோவில் உள்ளது. அதிலுள்ள பாண்டுரங்கன் ருக்மணி தேவி சன்னதியில், ஆண்டுதோறும், ஆஷாட ஏகாதசி தினத்தில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று, வழிபட அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, ஆஷாட ஏகாதசி தினமான இன்று, பக்தர்கள் கருவறைக்குள் சென்று பாண்டுரங்கனை வழிபட்டனர். இதையொட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !