பெத்தநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :2316 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், தேவேந்திர நகர் மாரியம்மன், மதுரை வீரன் கோவில் தேரோட்டத்தையொட்டி, பால்குட ஊர்வலம், நேற்று (ஜூலை., 12ல்) நடந்தது.
இதையொட்டி, ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தை சுற்றி உருளுதண்டம் போட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மேள தாளம் முழங்க, பால்குட ஊர்வலம் நடந்தது. சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின், கூழ் ஊற்றுதல், ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, மூலவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.