உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் விழா

வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் விழா

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தெற்கு தெரு காளியம்மன்கோயில் பொங்கல் விழா கடந்த இரு நாட்களாக நடந்தது. பக்தர்கள் பெரிய ஊரணி கரை சென்று அம்மனை உருவமாக செய்து எடுத்து வந்தனர்.

மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த பக்தர்களை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று அம் மனை கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். காலையில் உற்சவ அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர். சிறப்பு பூஜைகள்,பஜனை வழிபாடு, மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம், அக்னிசட்டி எனநேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !