உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் 19ல் ஆடித் திருவிழா

கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் 19ல் ஆடித் திருவிழா

கீழ்நல்லாத்துார்:கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில், வரும், 19ல், 13ம் ஆண்டு ஆடித் திருவிழா நடைபெறுகிறது.

கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துாரில் உள்ள எல்லையம்மன் கோவிலில், 19ம் தேதி, 13ம் ஆண்டு ஆடித் திருவிழா நடைபெற உள்ளது.அன்று காலை, 8:00 மணிக்கு, பம்மை உடுக்கை யுடன் வீதியுலா வந்து, பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை, 7:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !