உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை அருகே, காஞ்சமலை கோவிலில் விருந்து பக்தர்கள் பங்கேற்பு

வால்பாறை அருகே, காஞ்சமலை கோவிலில் விருந்து பக்தர்கள் பங்கேற்பு

வால்பாறை:வால்பாறை அருகே, காஞ்சமலை கோவில் திருவிழாவில் கிடா வெட்டி பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ளது காஞ்சமலை தெற்கு எஸ்டேட். இங்குள்ள முனீஸ்வரன் சுவாமி திருக்கோவிலில், ஆண்டு தோறும் பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சியையொட்டி, நேற்று (ஜூலை., 15ல்) காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது.

பக்தர் பொன்குமரன் சார்பில் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடுகள் பலியிடப்பட்டன. அன்னதான விழாவை வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, மாவட்ட ஆதிதிராவிடநலக்குழு உறுப்பினர் பொன்கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !