உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் ஆனித்திருவிழா அம்மனை வழிபட்ட பக்தர்கள்

பெரியகுளத்தில் ஆனித்திருவிழா அம்மனை வழிபட்ட பக்தர்கள்

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவில் இன்று  (ஜூலை., 17ல்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை  வழிபடுகின்றனர்.

இக்கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இங்கு ஆனித்திருவிழா ஜூலை 2ல்  சாட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் 10 நாள் திரு விழா துவங்கியது. ஏராளமானோர் அம்மனை தரிசிக்கின்றனர்.

தினமும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார். நேற்று முன்தினம்  (ஜூலை., 15ல்) தென்கரை வணிகவைசியர் சங்கத்தினர் நடத்திய மண்டகப்படியில்  அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.

நேற்று 9ம் நாள் திருவிழாவில் அதிகாலையிலிருந்து, மதியம் வரை ஏராளமான  பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் எடுத்து ஊற்றினர். ஆயிரம் கண்பானை, மாவிளக்கு  எடுத்து அம்மனை வழிபட்டனர். இன்று 10ம் நாள் முக்கிய திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி  எடுத்து அம்மனை வழிபடுகின்றனர்.டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் அண்ணாதுரை, மண்டகப்படிதாரர்கள் செய்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !