இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறப்பு
ADDED :2271 days ago
சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.பரம்பரை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன் பூஜாரி, ராமமூர்த்திபூஜாரி, தலைமை வகித்தனர். செயல் அலுவலர் கருணாகரன், விருதுநகர் உதவி ஆணையர் கணேசன் முன்னிலை வகித்தனர். ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், அய்யப்ப சேவா சங்கத்தினர் கோயில் பணியாளர்களுடன் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். தங்கம் 154 கிராம், 525 கிராம் வெள்ளி, ரூ 38,07,929 பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.