உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேட்ட வரம் தரும் படித்துறை விநாயகர்

கேட்ட வரம் தரும் படித்துறை விநாயகர்

அருப்புக்கோட்டை: வாழ்வில் சோதனை வரும் போது தான் கடவுளை நினைக்கிறோம்.  ஒரு நல்ல காரியத்தை செய்ய நினைக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் தடையால் நிலைந்து குலைந்து போகிறோம்.

இதனால் மனம் சஞ்சலப்பட்டு இறைவனை பிரார்த்திக்கிறோம். பெண்களுக்கு திருமணம் என்பது வாழ்வில் முக்கியமான ஒன்று.  ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்வது வைப்பதில் குடும்பமே ‘படாதபாடுபடுகிறது.

ஒருசில பெண்களுக்கு திருமண தடை வரும் போது பெற்றோர்கள் கஷ்டப்படுகின்றனர்.  திருமண தடை நீங்க எதாவது நேர்த்தி கடன் செலுத்த கோயில் கோயிலாக  செல்கின்றனர். அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள  படித்துறை வரசித்தி விநாய கரை வேண்டினால் திருமண தடை நீங்கும், குழந்தை  பாக்கியம் கிடைக்கும்.

நூற்றாண்டு புகழ் வாய்ந்த இந்த விநாயகர் தெப்பம் தோண்டும்போது, நான்கு கரம்  மற்றும் ஜடா முடியுடன் தவக் கோலத்தில் சிலையாக  கிடைத்ததாக வரலாறு உண்டு.

மீனாட்சி சொக்கநாதர் கோயில் கட்டுவதற்கு முன்பே தோன்றியதாக வரலாறு குறிப்பு  உள்ளது. புகழ் வாய்ந்த இவ்விநாயகரை வழிபட்டால் துன்பங்கள் அகலும். நினைத்த  காரியமும் நிறைவேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !