உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகமுத்து மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல்

திண்டிவனம்: திண்டிவனம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் இலுப்ப தோப்பு பகுதியில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கூழ்வார்ப்பு திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, பகல் 12:00 மணிக்கு கூர்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு புஷ்ப விமான வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று (22ம் தேதி) காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு, முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !