உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் பூட்டை மாரியம்மன் தேர் திருவிழாவில் அன்னதானம்

சங்கராபுரம் பூட்டை மாரியம்மன் தேர் திருவிழாவில் அன்னதானம்

சங்கராபுரம் : சங்கராபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் பூட்டை மாரியம்மன் தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்கபட்டது.

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, அரிமா சங்கத் தலைவர் முர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் வரதராஜன், துரைராஜ், ஜனார்த்தனசிங், ஜனனி முன்னிலை வகித்தனர். செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியை அரிமா மாவட்ட ஆளுனர் கீதா கமலகண்ணன் தொடங்கி வைத்தார். 5000 பேருக்கு அன்னதானம் வழங்கபட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் தலை வர்கள் சீனுவாசன், அஸ்மதுல்லா, பாலு, விஜயகுமார், தீனதயாளன், ராஜேந்திரன், கதிரவன், வட்டார தலைவர் செல்வி மகாலிங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். குபேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !