உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் அருகேயுள்ள வைரவன்பட்டியில் பிரம்மோற்ஸவம் துவக்கம்

திருப்புத்துார் அருகேயுள்ள வைரவன்பட்டியில் பிரம்மோற்ஸவம் துவக்கம்

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகேயுள்ள என்.வைரவன்பட்டியில்   வடிவுடையம்பாள் சமேத வளரொளிநாதர் கோயிலில் நாளை (ஜூலை., 25ல்) காலை  வயிரவசுவாமி பிரம்மோற்ஸவம் துவங்குகிறது.

இக்கோயிலில் ஆடி மாதத்தில் 11 நாட்கள் இந்த உற்ஸவம் நடைபெறும். நாளை (ஜூலை., 25ல்)  காலை 7:15 மணிக்கு அனுக்ஞை மற்றும் கணபதி ஹோமத்துடன் பூஜைகள்   துவங்கு கின்றன. தொடர்ந்து மாலை காப்புக்கட்டி இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு   தீபாராதனை நடைபெறும். ஜூலை 26 காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள்  துவங்குகின்றன.

காலை 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் வயிரவர்  புறப்பாடும்,இரவு 9:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் வயிரவர் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, இரவில் வாகனங்களில்   திருவீதி உலா நடைபெறும். ஜூலை 27 மாலை 4:30 மணிக்கு தேர் வடம்   பிடித்தலும், ஜூலை 28 காலை தீர்த்தவாரியும், இரவில் பூப்பல்லக்கும், ஜூலை 29  காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷே கம், இரவில் திருக்கல்யாணம்   நடைபெறும். ஏற்பாட்டினை வயிரவன் கோயில் நாட்டுக் கோட்டை நகரத்தார்   செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !