உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரோஜா நிற பட்டாடையில் அத்திவரதர் அருள்பாலிப்பு

ரோஜா நிற பட்டாடையில் அத்திவரதர் அருள்பாலிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் நடக்கும் அத்திவரதர் வைபவத்தில், இன்று(ஜூலை 26) அத்திவரதர் ரோஜா நிற பட்டாடையில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பாதாம் மாலை, அத்திப்பழ மாலை, முத்துமாலைகளும் அத்திவரதருக்கு அணிவிக்கப்பட்டுள்ளன.

ஆடி கிருத்திகை காரணமாக, காஞ்சிபுரத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என்பதால், ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். டோனர் பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 ஆயிரம் பேர் மட்டுமே விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !