உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தேய்பிறை திருஆவினன்குடி கோயிலில் அஷ்டமி வழிபாடு

பழநி தேய்பிறை திருஆவினன்குடி கோயிலில் அஷ்டமி வழிபாடு

பழநி : தேய்பிறை அஷ்டமியை முனிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில்  உள்ள பைரவரு க்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்டப் பொருட்களால் அபிஷேகம்  செய்தனர். வெள்ளிக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தெற்குகிரி  வீதியில் சாதுசாமி மடத்திலுள்ள எட்டரை அடி உயரமுள்ள விஜயபைரவருக்கு  அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தயிர்சாதம், பொங்கல் பிரசாதம்  வழங்கப்பட்டது.மேலும் பெரியநாயகியம்மன்கோயில், பெரியாவுடையார் கோயில்  உள்ளிட்ட கோயில்களிலும் பைரவருக்கு அபிஷேக வழிபாடு நடந்தது. பூசணி,  தேங்காய், விளக்குகளில் தீபம் ஏற்றி திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !