திருத்தணியில் ஆடி கிருத்திகை: தெப்பத் திருவிழா கோலாகலம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவர் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கீரிடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்களை, சுவாமிக்கு அணிவித்து, சிறப்புதீபாராதனை நடந்தது.
தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சம் பக்தர்கள் மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி மற்றும் அன்னக் காவடிகள் எடுத்து வந்தனர்.பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடியபடி, மலைக்கோவிலுக்கு சென்று,மூலவரை வழிபட்டனர். அதிகளவிலான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில், மூலவரை தரிசிக்க, 7 மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.விரைவு தரிசனத்திற்காக, கோவில் நிர்வாகம், 200 மற்றும் 100 ரூபாய் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது.ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதி.நேற்று, மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.அரசு துறைகளின் கண்காட்சிமக்கள் தொடர்பு துறை சார்பில், திருத்தணி முருகன் கோவிலில், அரசின், 18 துறைகளின் பணி விளக்க கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அரசின் நலத்திட்டங்கள் குறித்து, மக்களுக்கு விளக்கி கூறப்படுகிறது.திருத்தணி சன்னிதி தெரு தணிகேசன் திருமண மண்டபத்தில் உள்ள இந்த அரங்கில், வேளாண், கால்நடை, சமூக நலம் உள்ளிட்ட துறையினர்,கண்காட்சி அமைத்து உள்ளனர்.