திருப்பூர் செல்லாண்டியம்மன் குண்டம் விழா கோலாகலம்
திருப்பூர், செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் நகரின் காவல் தெய்வம் என போற்றப்படும், ஸ்ரீ செல்லாண்டியம்மன், நொய்யலாற்றின் கரையில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா, கடந்த, 17ல், கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், கொடியேற்றம், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் மற்றும் நொய்யல் நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, மாலை, 6:00 மணிக்கு, அம்மை அழைத்தல், அம்மன் திருக்கல்யாணம்; தொடர்ந்து, குண்டத்துக்கு அக்னி இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று( 30ம் தேதி) காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.