உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவக்கரையில் ஆடி அமாவாசை ஜோதி தரிசனம்

திருவக்கரையில் ஆடி அமாவாசை ஜோதி தரிசனம்

மயிலம் : திருவக்கரையில் வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில்  ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று (ஜூலை., 31ல்) காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.  
கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர்,  குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு  அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் கோவிலில் ஜோதி  காண்பித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !