உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனூர் ராஜ நாகலட்சுமி அம்மன் கோவிலில் வளைகாப்பு திருவிழா

மோகனூர் ராஜ நாகலட்சுமி அம்மன் கோவிலில் வளைகாப்பு திருவிழா

மோகனூர்: மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு, ராஜ நாகலட்சுமி அம்மன்  கோவிலில் நடந்த வளைகாப்பு திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை  வழிபட்டனர். மோகனூர் அடுத்த ராசிபாளையம் மாருதி நகரில், ராஜநாகலட்சுமி  அம்மன், சங்க பால நாகராஜர் கோவில் உள்ளது. ஆடி, மூன்றாம் வெள்ளியை  முன்னிட்டு, 19ம் ஆண்டு, வளைகாப்பு திருவிழா கொண்டாடப்பட்டது. நேற்று  (ஆக., 2ல்)அதிகாலை, கணபதி ஹோமம், அபிஷேகம், கோ, சுமங்கலி, கன்னிகா பூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு கோவிலை  அடைந்தனர். அதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகல்,  12:00 மணிக்கு, தீபாராதனை நடந்தது. ஏராளமான கர்ப்பிணிகளுக்கு, வளைகாப்பு  செய்யப்பட்டு, குங்குமம், வளையல், மஞ்சள், தாலிக்கயிறு வழங்கப்பட்டது.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !