அந்தியூர் அருகே, செம்முனி கோவிலில் வன தேர்த்திருவிழா
அந்தியூர்: அந்தியூர் அருகே, வெள்ளித்திருப்பூர், குரும்பபாளையம், மன்னாதசுவாமி, பச்சை நாயகி அம்மன், மற்றும் செம்முனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமையில், தேர்திருவிழா நடக்கிறது.
இதன்படி நடப்பாண்டு விழா, கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, முதல் வனத்தேர்திருவிழா நேற்று (ஆக., 2ல்) நடந்தது. இதற்காக, கோவில் மடப்பள்ளியில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் செம்முனி ஆண்டவர் உலா வந்தார்.
அதை தொடர்ந்து இன்று பச்சபூஜை, 15, 16ல் மறு வனத்தேர்திருவிழா நடக்கும். 23ல், பால் பொங்க லுடன் விழா நிறைவடைகிறது. நேற்று (ஆக., 2ல்) நடந்த விழாவில், வெள்ளித்திருப் பூர், குருவ ரெட்டியூர், சனிச்சந்தை, பட்லூர், கோவிலூர் மற்றும் அந்தியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.