உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில், சிறப்பு யாகம்

புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில், சிறப்பு யாகம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில்,  சிறப்பு யாகம் நடந்தது.பூசம் நட்சத்திரத்தில் வியாழக்கிழமை சேர்ந்து வருவது  குபேரன் வழிபாட்டிற்கு சிறந்த நாளாகும்.

எனவே குபேரன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதனையொட்டி சேந்திரக் கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில் நேற்று முன்தினம் (ஆக., 1ல்) சிறப்புயாகம் நடந்தது. அதை யொட்டி அன்று காலை 11.00 மணிக்கு கணபதி ஹோமம், கோபூஜை, தனபூஜை நடந்தது.  
தொடர்ந்து தேன், பால், விபூதி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால்  அபிஷேக ஆராதனை, நண்பகல் 12.45 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது.  ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம்  வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !