மதுரை மழை வேண்டி பிரார்த்தனை
ADDED :2300 days ago
மதுரை:மதுரை தாம்பிராஸ் ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில் திருவாடிப்பூர உற்ஸவம் மற்றும் மழை வேண்டி பிரார்த்தனை நடந்தன.இதையொட்டி கணபதி பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திருப்பாவை முப்பதும் சேவித்து பெருமாள் தாயார் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தன. மழை வேண்டி திருப்பாவை பாசுரம் 108 முறை பாராயணம் செய்யப்பட்டது. பெண்க ளுக்கு வளையல் வழங்கப்பட்டது. தாம்பிராஸ் மாநில இணை பொதுச் செயலாளர் இல.அமுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் செய்தனர்.