உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நகரி தேசம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

நகரி தேசம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

நகரி:நகரி, தேசம்மன் கோவிலில், நேற்று (ஆக.6), ஆடி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில், தேசம்மன் கோவில் உள்ளது. இக்கோவி லில், நேற்று (ஆக.6),, மூன்றாவது ஆடி மாத செவ்வாய்க் கிழமையையொட்டி, நகரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

முன்னதாக, அதிகாலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ,மேலும், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !