மதுரை நன்மை தருவார் கோயிலில் சுந்தரர் குருபூஜை
ADDED :2257 days ago
மதுரை : மதுரை, இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சுந்தரரின் குருபூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று (ஆக.,7) மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் குருபூஜை விழா முனைவர் சுரேஷ் சிவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தேவாரம் பாராயணமும், சுந்தரர் திருவீதி உலாவும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.