உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரூர் வரலட்சுமி விரதம்: மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

அரூர் வரலட்சுமி விரதம்: மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

அரூர்: வரலட்சுமி விரதத்தையொட்டி, அரூரில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் பழைய பேட்டை மகாசக்தி மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி விரதத்தை யொட்டி, நேற்று (ஆக., 9ல்) அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.

இதில், பங்கேற்ற பெண்களுக்கு ஜாக்கெட் துணி, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !