உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

கிருஷ்ணகிரி: வரலட்சுமி நோன்பையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் அமைந்துள்ள துளுக்காணி மாரியம்மன் கோவிலில், சுமங்கலிகள் பங்கேற்ற சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெண்கள்  அம்மனுக்கு பொங்கல், புதிய துணிகள், பலகாரங்கள் வைத்து படைத்தனர். ராஜ அலங்காரத்தில் துளுக்காணி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் மங்கல பொருட்கள்  வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !