உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாக பூஜை

பழநி கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாக பூஜை

பழநி: ஆடி லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனைபூர்த்தி யாகபூஜை நடந்தது.தைப்பூசவிழா நடைபெறும். பழநி பெரியநாயகியம்மன்கோயிலில் ஆடி லட்சார்ச்சனைவிழா ஜூலை 17ல் துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடந்தது. தினமும் மாலையில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று (ஆக., 11ல்) காலை லட்சார்ச்சனை பூர்த்தி யாக பூஜையில் புனித நீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் 1008 சகஸ்கர நாம வழிபாடு, சுமங்கலி பூஜை நடந்தது. பெண்கள் ஜாக்கெட், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு வைத்து வழங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி கடைசி வெள்ளி ஆக., 16-ல் பெரியநாயகியம்மனுக்கு மகா அபிஷேகம், தங்ககவசம் அலங்காரமும், இரவு 8:30 மணிக்கு வெள்ளிரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையார் (பொ)செந்தில்குமார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !