உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்

ஈரோடு சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்

ஈரோடு: சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஈரோடு அருகே, பல வடிவங்களில்  விநாயகர் சிலை கள் தயாரிக்கும் பணி நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா, நாடு  முழுவதும் செப்.,2ல் கொண்டாடப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில், இந்து  முன்னணி உள்ளிட்ட பிற அமைப்புகள் சார்பில், 1,000க்கும் மேற்பட்ட சிலைகள்  அமைக்கப்படவுள்ளன. விழா நெருங்கும் நிலையில், ஈரோடு மாவட் டத்தில்,  ஈரோடு, கோபி, பவானி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விநாயகர் சிலை  தயாரிப்பு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்து முன்னணி சார்பில்,  வெட்டுக்காட்டுவலசில் சிலை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக  கடலூரில் இருந்து, சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் பல்வேறு வடிவங்களில், சிலைகளை தயாரித்துள்ளனர். வர்ணம் பூசும்  பணி மட்டுமே பாக்கியுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது: மூன்று அடி முதல், 11 அடி உயரம்  வரை சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. மைதா மாவு, பேப்பர் மாவு கலவைகள்  பயன்படுத்தப்பட்டன. சிம்ம வாகன விநாயகர், மான் வாகன விநாயகர், மயில்  வாகன விநாயகர், குதிரை வாகன விநாய கர், ஜல்லிக்கட்டு விநாயகர், முருகன்  வைத்திருக்கும் விநாயகர், சிவலிங்கம் வைத்திருக்கும் விநாயகர் உள்பட  பல்வேறு வகையான சிலை தயாரிக்கப்படுகிறது. வர்ணம் பூசும் பணி  முடிந்தவுடன், சிலைகள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !