உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி புனித இஞ்ஞாசியார் ஆலய தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி புனித இஞ்ஞாசியார் ஆலய தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி: புனித இஞ்ஞாசியார் ஆலய தேர்த்திருவிழா நடந்தது. இதில்  திரளான கிறிஸ் தவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டை புனித  இஞ்ஞாசியார் ஆலய தேர்த் திருவிழா கடந்த, 9ல் கொடியேற்றத்துடன்  துவங்கியது.

அன்று மாலை, 6:30 மணிக்கு திருப்பலி, மறையுறை, திருக்கொடியேற்றம் ஆகியவை, தர்மபுரி மறை மாவட்ட பொருளாளர் அதிரூபன் தலைமை யில் நடந்தது. பின்னர், வனத்து சின்னப்பர் தேர் வீதிஉலா வந்தது.  

தொடர்ந்து, 10 மாலை, அந்தோணியார் தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும்,  திருப்பலி மற்றும் மறையுரை சுண்டம்பட்டி பங்குதந்தை லூர்துசாமி  தலைமையில் நடந்தது. நேற்று முன்தினம் (ஆக., 11ல்) மாலை, 6:30 மணிக்கு பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில், திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து, 8:00 மணிக்கு, புனித இஞ்ஞாசியார் தேர் மந்தரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. நகரின் முக்கிய சாலை வழியாக, வீதி உலா வந்த தேருடன் திரளான கிறிஸ்தவர்கள் உடன் சென்றனர். நேற்று (ஆக., 12ல்) காலை, திருப்பலி மற்றும் திருக்கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !