உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் திருக்கல்யாணம்

தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் திருக்கல்யாணம்

திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

ஆடிப்பெருந்திருவிழா ஆக.7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்களும் அன்ன வாகனம், கேடயம், கருட, சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு பூ, மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு பூப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. நாளை (ஆக.15) மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், ஆக.17 ல் மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது என கோயில் அறங்காவலர்கள் தெரிவித்தனர். தாண்டிக்குடி: மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. விளையாட்டு போட்டிகள் நடந்தன. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !