பூஜாரியின் சாட்டையடிக்கு காத்திருந்த பக்தர்கள்
ADDED :2258 days ago
கொடைரோடு, மாலையகவுண்டன்பட்டி கோயில் விழாவில், பூஜாரியிடம் சாட்டையடி வாங்குதல், தலையில் தேங்காய் உடைத்தலுக்காக ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். கொடைரோடு அருகே மாலையகவுண்டன்பட்டியில், சென்னப்பன், லட்சுமி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இரு நாட்களாக, சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. இதில், பாரம்பரிய முறைப்படி, நேர்த்திக்கடன் செலுத்துதல் நடந்தது. விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், கோயில் முன்பு வரிசையில் காத்திருந்தனர்.விசஷே ஆராதனைக்குப்பின் கோயிலில் இருந்து சாமியாடியபடி வந்த பூஜாரி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல், சாட்டையடி வழங்குதல் போன்றவற்றை நிறைவேற்றினார். பொட்டிக்குளம், உச்சனம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.