குமாரபாளையத்தில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை
ADDED :2343 days ago
குமாரபாளையம்: உலக நன்மை வேண்டி, 108 திருவிளக்கு பூஜை குமாரபாளையத்தில் நடந்தது. குமாரபாளையத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மாநில துணை தலைவர் முரளிதரன் தலைமையில், உலக நன்மை வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
பாரதி முரளீதர சுவாமிகள், மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் உள்பட பலர் வாழ்த்தினர். இவர் கள் பேசுகையில், ’ஆத்மா தூய்மையடைய கோவிலுக்கு செல்ல வேண்டும். தீப வழிபாட்டில் கல்வி, ஞானம் கிடைக்கும். பூரணமாக அர்ப்பணித்து தீப வழிபாட்டில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு அர்ப்பணித்தால், பூரண பலன் கிடைக்கும். தீபம் போல் நம் எண்ணங்கள் மேலோங்கும்’ என்றனர். ஏற்பாடுகளை நகர தலைவர் சாம்பசிவ சிவாச்சாரியார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.