உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்குமாட வீதியை 16 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்து, பதினாரு கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 10:30 மணிக்கு பவுர்ணமி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


புதுச்சத்திரம்: சின்னாண்டிக்குழி அமிர்தவள்ளி அம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு அம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு அமிர்தவள்ளி அம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில், கோவிலை வலம் வந்தது. இரவு 10.00 மணிக்கு முருகன்,வள்ளி, தெய்வானை, வினாயகர், அமிர்தவள்ளி அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !