கடலுார் செல்லியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :2348 days ago
கடலுார்: கடலுார் துறைமுகம் செல்லியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. செடல் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (ஆக., 16ல்) காலை, கோ பூஜை, நவகலச ஹோமம் நடந்தது.
தொடர்ந்து, ஆனந்த விநாயகர் கோவிலில் பால்குட ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைந்தது. பின்னர், நவக்கிரக பூஜைகள், 108 பால்குட அபிஷேகம் நடந்தது.பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை மாவிளக்கு பூஜை நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.