சூளகிரி அம்மனுக்கு பெண்கள் தீச்சட்டி ஊர்வலம்
ADDED :2243 days ago
ஓசூர்: சூளகிரி மாரியம்மன் கோவிலுக்கு, ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பெண் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று (ஆக., 16ல்) ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
சூளகிரி கீழ் தெரு, அண்ணா நகர், வாணியர் தெரு, ராஜாஜி நகர், ஒமதேப்பள்ளி, கிருஷ்ணாபாளை யம், அணாசந்திரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து, மழை வேண்டியும், உலக நன்மைக் காகவும் பெண் பக்தர்கள் பலர் தீச்சட்டி ஏந்தி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். தொடர் ந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக, பக்தர்களுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கூழ் வாங்கி சாப்பிட்டனர்.