ஈரோட்டில் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED :2275 days ago
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட, இந்து முன்னணி, கிழக்கு நகர் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் சக்தி முருகேஷ் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., பிரச்சாரகர் ராமசாமி பேசினார். மாவட்ட தலைவர் ஜெகதீசன், சதுர்த்தி விழா குறித்து விளக்கினார். கிழக்கு நகர் சார்பில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு, செப்.,2ல், 108 இடங்களில் விநாயகர் சிலை வைக்க வேண்டும். செப்.,5ல் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.