கிருஷ்ணர் பிறப்பின் அதிசயம்
ADDED :2323 days ago
இதென்ன அதிசயம்! கிருஷ்ணர் பிறந்த போது தேய்பிறை அஷ்டமி ஆயிற்றே! பவுர்ணமி எப்படி தெரியும்? இதோ...கமானிக்யா என்னும் ஜோதிட நூல் சொல்வதை கேளுங்கள். கி
ருஷ்ணர் அவதரித்த போது கிரகங்கள் எல்லாம் சுபமான இடத்தில் இருந்தன. தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும், பகவான் கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் வானில் பவுர்ணமி பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தியபடி பெற்றோருக்கு காட்சியளித்தார் கிருஷ்ணர். கரிய மேகம் போன்ற அவர் மஞ்சள் பட்டாடை, நவரத்தின ஆபரணங்கள் சூடியிருந்தார். அவரைப் பெற்ற தாய் தேவகியும் தெய்வப் பெண் போல ஜொலித்தாள்.