பழநி முருகன் கோயிலில் பாலாலயம்
ADDED :2238 days ago
பழநி, பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள், செப்டம்பரில் பாலாலய பூஜையுடன் துவங்க உள்ளது. பழநி முருகன் கோயிலில் 2006ல் கும்பாபி ஷேகம் நடந்தது.
ஆகமவிதிப்படி 12ஆண்டுகள் முடிந்து விட்டதால், கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.2018 நவம்பரில் இந்து சமய அறநிலையத்துறை திருப்பணிகுழு ஸ்தபதிகள், பொறியியல், தொல்லியியல் துறை வல்லுனர் குழுவினர் இக்கோயிலில் கற்சிலைகள், மண்டபத்துாண், சுதைகளை ஆய்வு செய்தனர்.இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தொடர்பாக, வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். அதன்படி பழமை மாறாமல் சேதமடைந்துள்ள கற்சிலைகள், துாண்கள், சுதைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. கும்பாபிஷேக பணிகள் செப்டம்பரில் பாலாலய யாகபூஜையுடன் துவங்க உள்ளோம் என்றார்.