உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தி பிரம்மோற்சவ விழா துவங்கியது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள வேணுகோபால சுவாமிக்கு பத்து நாட்கள் நடைபெறும் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழா இன்று துவங்கியது.

விழாவின் முதல்நாளான இன்று அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 7:00 மணிக்கு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் முத்துப்பந்தல் விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. பகல் 12:00 மணிக்கு வேணுகோபாலன் சன்னதியில், ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு விசேஷ திருமஞ்சனம், சேவை சாற்றுமறை நடந்தது.  ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற கிருஷ்ணஜெயந்தி பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !