உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கா... இதென்ன சோதனை! மலை எங்கே?

சொக்கா... இதென்ன சோதனை! மலை எங்கே?

மதுரை : மதுரை மாவட்டம் எம்.குன்னத்துாரில் தொல்லியல் துறையால் பராமரிப்பில் உள்ள பழமையும், புரதான சிறப்புமிக்க சிவன் கோயில் மலையை சிதைத்து கிரானைட் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கி.பி., 8ம் நுாற்றாண்டில் சமண துறவியர் வாழ்ந்ததற்கான கல்வெட்டுக்கள், கற்படுகைகள் உள்ளன. உதயகிரி ஈஸ்வரர், உலகநாத ஈஸ்வரர், ஊர்க்காவல் ஈஸ்வரர், அஷ்ட ஈஸ்வரர், நீலகண்ட ஈஸ்வரர், மூலவால வீரபத்ர ஈஸ்வரர், வைரவ ஈஸ்வரர், குன்னத்துார் ஈஸ்வரர் என எட்டு குடைவறை சிவன் கோயில்கள் உள்ளன.கிரானைட் கற்களுக்காக கோயில்கள் அமைந்துள்ள மலைகளை சிதைத்து கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலின் உயரமான மலை முற்றிலும் சிதைக்கப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது. தற்போது கிரானைட் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோயில் மலைகளை சிதைத்தவர்கள் மீது தொல்லியல் துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !