உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் விநோத பூசாரி

ஆஞ்சநேயர் கோவிலில் விநோத பூசாரி

 புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே, ஆஞ்சநேயர் கோவில் பூசாரி, விநோதமான முறையில், பூஜை செய்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதியில், வினை அகலும் வீரயோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆறுமுகம், 60, என்பவர், பூஜை செய்து வருகிறார்.இங்கு, அனுமன் ஜெயந்தி விழா மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.சிறப்பு பூஜை செய்யும் போது, ஆறுமுகம், குரங்கு போல சத்தமிட்டும், ஆணிச் செருப்பு அணிந்தும், சன்னிதியை வலம் வருகிறார். மேலும், கையில் சூடம் ஏற்றி, தீபாராதனை காட்டுகிறார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், சனிக்கிழமைகளில், ஏராளமான பக்தர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !