உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் குவிந்தனர்

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் குவிந்தனர்

திருப்பூர்: திருப்பூர் செட்டி பாளையம், கூத்தம்பாளை யம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் குவிந்தனர்.திருப்பூர் செட்டிபாளையம், கூத்தம்பாளையம் 3வது வார்டில் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 23ல் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்து வருதல் மற்றும் யாக பூஜைகள் நடந்தது. 24ல், இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கண் திறப்பு, கலசங்கள் வைத்தல், மூன்றாம் காலயாக பூஜை நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, புண்யாகம், நாடி சந்தானம், தீபாராதனை, உடன் கலசங்கள் புறப்பாடு நடந்தது. பின், 8:00 முதல், 9:00 மணிக்குள் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது.விழாவை, பெருமாநல்லுார் ஸ்ரீ கோவார்த்தனாம்பிகை உடனமர் ஸ்ரீ உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உத்தலிங்கேஸ்ரவ சிவம் நடத்தி கொடுத்தார். இதில், பக்தர்கள் குவிந்தனர். இன்று முதல், 12 நாட்களுக்கு இரவு, 7:00 மணிக்கு மண்டல பூஜை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !