திருப்பூர் காங்கயத்தில் விசர்ஜன ஊர்வலம்
ADDED :2225 days ago
திருப்பூர்:காங்கயத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், விசர்ஜன ஊர்வலம் நடந்தது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, காங்கயத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 20க்கும் மேற்பட்ட விநாய கர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் பொங்கலிட்டு, சிறப்பு பூஜை செய்து வழிபட் டனர்.நேற்று 2ல் மாலை, களிமேட்டில் விசர்ஜன ஊர்வலம் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சங்கர கோபால் தலைமை வகித்தார். கோவை மண்டல தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். மாலை, 4:15 மணிக்கு விசர்ஜன ஊர்வலத்தை கோட்ட செயலாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய ரோடுகள் வழியாக சென்று, பழையகோட்டை ரோடு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவு பெற்றது. கொடுமுடி, காவிரி ஆற்றில், சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.