உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல்:விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று 4ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

நேற்று 4ம் தேதி காலை குடைப்பாறைப்பட்டி ஊர் பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். சக்திவேல் எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., சுஹாசினி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் சென்றது. தாரைத் தப்பட்டை யுடன், பஜனை குழுவினர் கோலாட்டம் ஆடியபடி வந்தனர்.

மதுரை ரோடு பகுதியில் சிலர், ’பள்ளிவாசல் பகுதி அருகே தாரைத்தப்பட்டை வாசிப்பதை நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்குப்பின் கலைந்து சென்றனர். விநாயகர் சிலை கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது.மாலையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் பஸ் ஸ்டாண்டில் தொடங்கியது. கன்னியாகுமரி சுவாமி தோப்பு அன்பாலயம் நிறுவனர் சிவசந்திரசுவாமிகள், தேசிய சிந்தனை கழகம் மா.கோ.சி.ராஜேந்திரன் இந்து முன்னணி பொது செயலாளர் ராஜா, அமைப்பாளர் சங்கர்கணேஷ், செயலாளர் சஞ்சீவிராஜ், செயற்குழு வீரத்திருமூர்த்தி பேசினர்.

கோட்டைகுளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.பழநி: பழநி நகர், கிராமப் பகுதியில் விஸ்வ இந்துபரிஷத், இந்து சக்தி சங்கமம் சார்பில், செப்.,2 விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. விஸ்வஇந்து பரிஷத் இணைச் செயலாளர் செந்தில்குமார், இந்துசக்தி சங்கமம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.

புலிப்பாணி பாத்திரசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சண்முகநதியில் சிலைகள் கரைக்கப்பட்டன.ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மற்றும் ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் இருந்து 32 விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் கொண்டு செல்லப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். தீரன்சின்னமலை கவுண்டர் வம்ச நிறுவன தலைவர் செல்வன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ரவிபாலன், துணை தலைவர் சூர்யா, செயலாளர் தயாநிதி, பொருளாளர் பிரவின் கலந்து கொண்டனர். தலையூற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வ லம் கன்னிவாடியில் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிலைகள், ஊர்வலமாக கன்னிவாடிக்கு அழைத்து வரப்பட்டன.

செயற்குழு உறுப்பினர் சிவாஜி தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், தினகரன், உத்திராஜா, செயற்குழு உறுப்பினர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். மச்சக்குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன

வடமதுரை: வடமதுரை யில் இந்து முன்னணி, பா.ஜ., சார்பில் 32 சிலைகள் நேற்று 4 ல், வட மதுரைக்கு வேனில் கொண்டு வரப்பட்டன. தேரடி வீதிகளில் ஊர்வலம் சென்ற பின் நரிப் பாறை குளத்தில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி செயலாளர் சதீஸ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, சக்திவேல் வரவேற்றனர். ஊர்வலத்தை பா.ஜ., மாநில செயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !