உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை கோயில் கும்பாபிஷேக விழா

அருப்புக்கோட்டை கோயில் கும்பாபிஷேக விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி தெற்கு தெருவில் உள்ள  செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் கால, 2 ம் கால யாகம் நடந்தது. கணபதி ஹோமம், பூர்ணாகுதி நவரக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.  நேற்று  காலை 6:00 மணிக்கு கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். காலையில் பெண்கள் பால்குடம் எடுத்தனர். மாலையில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !