உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா

கோத்தகிரி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா

கோத்தகிரி:கோத்தகிரி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா, கடந்த மாதம் 30ம்  தேதி, மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில்  கொடியேற்றத்துடன் துவங் கியது. 31ம் தேதி, உரிமைப்பேற்றின் ஊற்று, 1ம் தேதி  உன்னதரின் உடனிருப்பை உணர்த்தும் ஆரோக்கிய அன்னை, 6ம் தேதி அர்ப்பண  வாழ்வின் அடித்தளம், 7ம் தேதி மனிதகுலத்தின் மங்காத ஒளி என்ற  தலைப்புகளிலும் சிறப்பு திருப்பலி நடந்தன.

திருவிழா நாளான நேற்று (செப்., 7ல்) காலை, 6:00மணிக்கு தமிழிலும், 7:00 மணிக்கு ஆங்கி லத்திலும் திருப்பலி நடந்தது. 8:00 மணிக்கு உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலை மையில், கூட்டு திருப்பலி  நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, ஜெபமாலையும், 6:00 மணிக்கு, ஆரோக்கிய  அன்னையின் ஆடம்பர தேர் பவனி, தேவ நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில்,  நீலகிரி உட்பட, சமவெளி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பங்கு மக்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !